ஏதிலிகளுக்கு செலவிடப்படும் தொகையை குறைப்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 2028ம் ஆண்டளவில் ஏதிலிகளுக்கு ஒதுக்கப்படும் தொகையில் 700 மில்லியன் பிராங்குகளை சேமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஏதிலி கோரிக்கை விண்ணப்பங்களை துரிதப்படுத்துதல் மூலமும், உக்ரைன் மற்றும் ஏனைய நாடுகளின் ஏதிலிக் கோரிக்கையாளர்களுக்கு தொழிற்சந்தையில் சந்தாப்பம் வழங்குவதன் மூலமும் செலவு குறைக்கப்பட உள்ளது.
செலவு குறைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் ஏதிலி அந்தஸ்து கோருவோருக்காக செலவிடும் தொகை அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது
சமூக நலன்புரி மற்றும் சமூகத்தில் உள்ளீர்த்தல் ஆகியனவற்றிற்காக கூடுதல் தொகை செலவிடப்படுகின்றது.
எவ்வாறனெனினும் உலகின் பல்வேறு இடங்களில் பிரச்சினைகள் நிலவி வருவதனால் ஏதிலி கோரிக்கை எண்ணிக்கை குறைவடையும் சாத்தியங்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 2026ம் ஆண்டளவில் ஏதிலிகளுக்காக அரசாங்கம் செலவிடும் தொகையை 54 மில்லியன் பிராங்குகளினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.