சுவிட்சர்லாந்தில் பலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தொடர்பில் யூத அமைப்புக்கள் கரிசனை வெளியிட்டுள்ளன.
யூத சமூகங்களின் சுவிட்சர்லாந்து ஒன்றியம் இது தொடர்பிலான கரிசனையை வெளியிட்டுள்ளது.
அண்மைய நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் பலஸ்தீன ஆதரவு போராட்டங்களல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பல்கலைக்கழகங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பல்கலைக்கழகங்களில் அடிப்படைவாத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக பணியாளர்களும் இந்தப் போராட்டங்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.