வருகை வீசா (On Arrival) வீசா வழங்கும் மோசடியில் இடம்பெற்ற பாரிய மோசடியுடன் ரணிலுக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டு வைரலாகியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டில் மத்திய வங்கியில் 10 பில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் சிக்கிக் கொள்ளாது அப்போதைய மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரை பலிக்கடாவாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
தற்பொழுது வீசா வழங்கும் மோசடியின் மூலம் 15 பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளாக அந்த சமூக ஊடகப் பதிவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக இவ்வாறு பாரிய தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த மோசடி அம்பலமானதும் குற்றச்சாட்டை டிரான் அலஸ் மீது சுமத்தி ரணில் தப்பித்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வீசா வழங்கும் நடைமுறையில் மோசடி இடம்பெறவில்லை என அரசாங்கம் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ளது.