சுவிட்சர்லாந்தில் நகர்ப் புறங்களில் வெள்ளப் பெருக்கு பெரும் பிரச்சினையாக உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலை மாற்றம் காரணமாக நகர்ப் புறங்களில் அதிகளவில் வெள்ளம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெள்ள அபாயம் நகரங்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் மட்டுமன்றி உலகின் ஏனைய நாடுகளிலும் நகரங்களில் வெள்ளப் பெருக்கு நிலைமை பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் மொத்த சனத்தொகையில் 23 வீதமானவர்கள் நூறாண்டுக்கு ஒரு தடவை வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் நகர நிர்வாகங்கள் தற்பொழுது வெள்ள நிலைமைகளை கட்டுப்படுத்துவது குறித்து கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.