சுவிட்சர்லாந்தில் பனிப்பாறை சரிவில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
பேர்ன் கான்டனின் பேர்னிஸ் ஒபர்லன்ட் பகுதியின் கான்டெர்ஸ்டெக் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பனிப்பாறைகள் திடீரென சரிந்த காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வரும் 32 வயதான பிரான்ஸ் பிரஜை ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உலங்கு வானூர்திகள், மோப்ப நாய்கள், மலையேறிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களின் ஒத்துழைப்புடன் பனிப்பாறை சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
காலநிலை அவதான நிலையத்தின் எதிர்வுகூறல்களின் அடிப்படையில் பனிமலைகளில் ஏறுதல் பனி விளையாட்டுக்களில் ஈடுபடுதல் என்பனவற்றை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதல் இதுவரையில் சுவிட்சர்லாந்தில் பனிப்பாறை சரிவுகளில் சிக்கி 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.