சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிற்கான பயணங்களை, ஓமான் விமான சேவை நிறுவனம் ஆரம்பிக்க உள்ளது.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதல் இந்த விமானப் பயணங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 5ம் திகதி முதல் மஸ்கட்டிலிருந்து ஓமானுக்கு நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.
ஆரம்ப கட்டமாக வாரத்தின் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் வாரத்தின் நான்கு நாட்கள் விமான சேவை முன்னெடுக்கப்பட உள்ளது.
போயிங் 787-9 டிரிம்லைனர் விமானம் இந்த சேவைக்காக பயன்படுத்தப்பட உள்ளது.
இதேவேளை எடெல்வைஸ் விமான சேவை நிறுவனமும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் சூரிச் – மஸ்கட் நகரங்களுக்கு இடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க உள்ளது.