தென்கொரியாவில் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்கில் விசேட அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யியோல் இது தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
பிறப்பு வீத குறைவானது நாட்டின் தேசிய அவசர நிலைமையாக காணப்படுவதாக ஜனாதிபதி யூன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் குழந்தைகள் பிறப்பு மிகவும் குறைந்த அளவில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டில் பிறப்பு வீதம் 0.72 வீதமாக காணப்படுகின்றது.
உலகின் மிகவும் குறைந்தளவு பிறப்பு வீதம் கொண்ட நாடாக தென்கொரியா காணப்படுகின்றது.
நாட்டின் சனத்தொகை பரம்பலை பேண வேண்டுமாயின் பெண் ஒருவர் சராசரியாக 2.1 பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.