உலகின் முதனிலை விமான உற்பத்தி நிறுவனமான போயிங் நிறுவனத்திற்கு சவால் விடுக்கும் வகையில் பிரேஸிலின் எம்ராரர் விமான உற்பத்தி நிறுவனம் வளர்ச்சி கண்டு வருகின்றது.
சிறிய ரக பயணிகள் ஜெட்களை உற்பத்தி செய்வதில் எம்ராரர் நிறுவனம் பிரபல்யம் அடையத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் விரைவில் இந்த எம்ராரர் விமானத்தைக் கொண்டதாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏ320நியோ மற்றும் போயிங் 737 மெக்ஸ் விமானங்களுடன் போட்டியிடும் அளவிற்கு எம்ராரர் விமானங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கா, ஜோர்தான் சிங்கப்பூர் போன்ற நாடுகள் இந்த விமானங்களை கொள்வனவு செய்யத் தொடங்கியுள்ளன.
குறைந்தளவு சக்தி வளத்தை இந்த விமானங்கள் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் போயிங் விமானங்களை பின்தள்ளி எம்ராரர் முன்னிலை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அநேகமான விமான சேவை நிறுவனங்கள் எம்ராரர் விமானங்களை கொள்வனவு செய்ய ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.
எம்ரார் விமானங்களில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தும் வகையில் ஆசனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.