பிரபல கார்பந்தய வீரர் மைக்கல் சூமாக்கரின் கைக்கடிகாரங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன்னர் சூமாக்கர் போர்மியூலா வன் போட்டயில் முதல் வெற்றியை பதிவு செய்திருந்தார்.
சூமாக்கர் மிகவும் அரிய வகை கைக்கடிகாரங்கள் பலவற்றை சேகரித்து வைத்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை சூமாக்கரின் கைக்கடிகாரங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.
150,000 சுவிஸ் பிராங்குகள் முதல் இரண்டு மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரையிலான விலைகளை உடைய கைக்கடிகாரங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.
ஜெனீவாவின் டெஸ் பெர்கோஸ் ஹோட்டலில் இந்த ஏல விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.