ஒன்லைன் வீசா முறைமையிலும் மாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒன் அரைவில் வீசா முறைமை மட்டுமன்றி ஒன்லைன் வீசா முறைமையிலும் மாற்றம் வேண்டுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஒன்லைன் வீசா முறைமையினால் வெளிநாட்டவர்கள் இலங்கை வருகை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்லைன் மற்றும் ஒன்லைன் வீசா முறைமைகள் முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளாக 52 டொலர்கள் அறவீடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 50 டொலர் திறைசேரிக்கும் 2 டொலர்கள் டெலிகொம் நிறுவனத்திற்கு சேவைக் கட்டணமாக வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது இந்த கட்டணத் தொகை டுபாய் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கூடுதல் கட்டணங்கள் அறவீடு செய்யப்படுவதனால் வெளிநாட்டவர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.