சுவிட்சர்லாந்து அரச நிறுவனங்களில் ரஸ்ய மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு சுவிஸ் நிறுவனங்களில் ரஸ்ய நிறுவனமொன்றின் மென்பொருள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மென்பொருள் பயன்பாடானது சைபர் பாதுகாப்பு பிரச்சினைகளை உருவாக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஸ்யாவின் மொஸ்கோவை தலைமையகமாக கொண்ட நிறுவனமொன்று இவ்வாறு மென்பொருளை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கணனிகள் மற்றும் அலைபேசிகள் என்பனவற்றின் கடவுச் சொற்களை கண்டறிந்து கொள்வதற்கு இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான சாதனங்களில் உள்நுழைவதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உருவாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.