வலுவான சூரியப் புயல் காரணமாக சுவிட்சர்லாந்தின் இரவு வானம் எழில் கோலம் பூண்டுள்ளது.
வர்ணஜாலம் மிக்க அழகிய வானமாக தோற்றமளித்தது.
சுவிட்சர்லாந்தின் ராவோயிரின் தாழ்நிலப் பகுதியில் இந்த அழகிய தோற்றம் தென்பட்டதாக சுவிஸ் வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இரவிலும் சூரிய புயலினால் ஏற்படக்கூடிய துருவ ஒளி அல்லது அரோராக்களை சுவிஸ் மக்கள் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக சூரியனில் ஏற்பட்ட புயல் நிலைமையினால் உலகின் பல நாடுகளில் இந்த துருவ ஒளியை மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
பூமிப் பரப்பில் இலட்ரோன் மற்றும் புரோட்டன்களினால் இந்த வர்ணஜால கோலங்களை காண முடிவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக பூமியின் துருவப் பகுதிகளில் அதிகளவில் இந்த அரோராக்களை பார்வையிட முடிகின்றது.
சில அரிய சந்தர்ப்பங்களில் மட்டுமே சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இதனை பார்வையிட முடிகின்றது.