-0.3 C
Switzerland
Monday, December 9, 2024

இலங்கையில் குடும்பம் ஒன்றின் சராசரி மாதச் செலவு ஒரு லட்சத்தை விடவும் உயர்வு

Must Read

இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதாந்த செலவு ஒரு லட்சம் ரூபாவினை விடவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் இந்த புள்ளி விபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பணவீக்க நிலைமைகளின் காரணமாக இவ்வாறு மாதாந்தச் செலவு தொடர்ச்சியாக அதிகரிக்கும் போக்கினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023 ஆம் ஆண்டில் குடும்பம் ஒன்றின் மாதச்செலவு 16.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் சராசரியாக குடும்பம் ஒன்றின் மாதச்செலவு 103283 ரூபா என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டியின் பிரகாரம் 2022ம் ஆண்டில் குடும்பம் ஒன்றின் ஒரு மாத நுகர்வுச்செலவு 88704 ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தொகை 2023 ஆம் ஆண்டில் 103283 ரூபாவாக ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் உணவு அல்லாத பொருட்களுக்கு கூடுதல் அளவில் மக்கள் பணத்தைச் செலவிட்டுள்ளனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES