இலங்கையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பண மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் போலியான விளம்பரங்களை பிரசூரித்து அதன் ஊடாக இந்த மோசடிகள் இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு பிரிவு எச்சரித்துள்ளது.
இந்த சமூக ஊடகங்களின் விளம்பரம் செய்யப்படும் பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சிக்கும் பயனர்களின் வங்கி விபரங்களை களவாடி பணமோசடி செய்வது தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இதுவரை 03 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனோபொல தெரிவித்துள்ளார்.
பயனர்கள் சில விளம்பரங்களைக் கிளிக் செய்யும் போது, அவர்கள் வேறொரு தகவலுக்குத் திசை திருப்பப்பட்டு இந்த வங்கி விபரத்திருட்டு மேற்கொள்ளப்படுகிறது.
சில லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் பயனாகளின் அலைபேசியின் கட்டுப்பாட்டை மோசடிகாரர்கள் தங்கள் வசப்படுத்திக் கொள்ளக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.