சுவிட்சர்லாந்திற்குள் சிகரட் கடத்திய பிரித்தானிய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயதான பிரித்தானிய பிரஜை ஒருவர் இவ்வாறு கைது செய்பய்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
4061 சிகரட் பக்கற்றுகளை சட்டவிரோதமான முறையில் சுவிட்சர்லாந்திற்குள் கடத்த முயற்சித்த போது குறித்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஜெனீவா விமான நிலையத்தில் வைத்து குறித்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கு இந்த சிகரட் வகைகள் எடுத்துச் செல்லப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையில் 20000 த்திற்கும் மேற்பட்ட சிகரட்கள் கடத்திய 10 சந்தர்ப்பங்களும், 10000த்திற்கும் மேற்பட்ட சிகரட்களை நடத்திய 5 சந்தர்ப்பங்களும் ஜெனீவா விமான நிலையத்தில் பதிவாகியுள்ளன.
கொங்கோ மற்றும் துருக்கியில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரட் வகைகளே அதிகளவில் மீட்கப்பட்டுள்ளன.