பலஸ்தீனத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்புரிமை வழங்குவது குறித்த வாக்கெடுப்பில் சுவிட்சர்லாந்து பங்கேற்கவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் சுவிட்சர்லாந்து பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பலஸ்தீனம் தொடர்பில் ஐக்கியநாடுகள் பாதுகாப்புப் பேரவையில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் பலஸ்தீனம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 12 உறுப்பு நாடுகள் வாக்களித்திருந்தன.
சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகியன வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.