2024ம் ஆண்டுக்கான யூரோவிஷன் பாடல் போட்டியில் சுவிட்சர்லாந்தின் பாடகர் நெமோ (Nemo) சாம்பியன் பட்டத்தை வென்றெடுத்துள்ளார்.
இறுதிப் போட்டியில் 25 போட்டியாளர்கள் போட்டியிட்ட நிலையில் இந்த வெற்றி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1956 மற்றும் 1988ம் ஆண்டுகளில் இதற்க முன்னர் சுவிட்சர்லாந்து போட்டியாளர்கள் யூரோவிஷன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தனர்.
ஜூரிகளின் வாக்களிப்பு மற்றும் தொலைபேசி வழியான மக்களின் வாக்களிப்பு ஆகியனவற்றின் அடிப்படையில் இந்த வெற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
25 போட்டியாளர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதன் பின்னர் வாக்களிப்பு அடிப்படையில் வெற்றியாளர் யார் என்பதனை ஏற்பாட்டுக்குழு தீர்மானித்தது.
ஜூரிகளின் வாக்களிப்பிற்கும் பொதுமக்களின் வாக்களிப்பிற்கும் இடையில் மாறுபாடு காணப்பட்டது.
இந்தப் போட்டியில் பல்வேறு சர்ச்சை நிலைமைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
டச்சுப் பாடகர் ஜூஸ்ட் கெலின் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
68ம் யூரோவிஷன் பாடல் போட்டியில் The Code’ என்ற பாடலை பாடிய சுவிட்சர்லாந்தின் நெமோ வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் நெமோ 591 புள்ளிகளுடன் முதல் இடத்தையும் குரோஷியாவைச் சேர்ந்த பேசி லசாங்க 547 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், உக்ரைனைச் சேர்ந்த அல்யோனா அல்யோனா மற்றும் ஜெரி ஹெய்ல் ஆகியோர் 453 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தப் போட்டியில் வெற்றியீட்டியமை பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும் வெற்றி குறித்த உணர்வை வார்த்தைகளினால் வெளிப்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் நெமோ தெரிவித்துள்ளார்.
நெமோ பால்நிலை அடையாளமற்ற ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.