இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை அளிப்பதில்லை என மகப்பேறு நிபுணத்துவ வைத்தியர் பேராசிரியர் அஜித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக இலங்கையில் பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் உள்ள தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் முன்னுரிமை அளிப்பதில்லை என்பதற்கு இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியே காரணம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“குழந்தை பெற்ற சில தம்பதிகள் இரண்டாவது குழந்தையைப் பற்றிக் கருத்தில் கொள்ளவில்லை, குழந்தை இல்லாதவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர் என்றும் அவர் கூறினார்.
இது இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என பேராசிரியர் அஜித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் கணிசமான வீழ்ச்சியைக் காட்டியுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் அண்மையில் தெரிவித்திருந்தது.
2020ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 325,000 ஆக இருந்த வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை தற்போது 280,000 ஆக குறைந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியிருந்தது.