சுவிட்சர்லாந்தின் பல இடங்களிலும் பலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் வியாபித்துள்ளன.
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பேசல், ப்ரைபோர்க் பல்கலைக்கழகங்களிலும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மிகவும் அமைதியான முறையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காசாவில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.