சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் பேச்சாளர் அன்ட்றே சிமோனாஸி மலையேறும் நிகழ்வில் பங்கேற்றிருந்த பொது உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
55 வயதான சிமோனாஸி இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2009ம் ஆண்டு முதல் அரசாங்கப் பேச்சாளராக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சிமோனாஸிக்கு பதிலீடாக நியமிக்கப்பட உள்ள அதிகாரி யார் என்பது பற்றி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
சிமோனாஸியின் மறைவிற்கு நாட்டின் பல்வேறு தரப்பினரும் இரங்கல் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.