மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரும் உலக செல்வந்தர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி மெலின்டாவினால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையிலிருந்து மெலின்டா விலகுவதாக அறிவித்துள்ளார்.
பில் – மெலின்டா அறக்கட்டளையின் இணைத் தலைவராக மெலின்டா கடமையாற்றி வந்தார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதியுடன் தாம் அறக்கட்டளையிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டில் பில் – மெலின்டா தம்பதியினர் விவகாரத்தினை அறிவித்தனர்.
கேட்ஸ் மெலின்டா அறக்கட்டளை உலகின் சுகாதாரத்துறை சார்பாக செயற்பட்டு வரும் முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கின்றது.
கடந்த 1994ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையில் இந்த இருவரம் குறித்த அறக்கட்டளைக்காக தங்களது சொந்த நிதியில் 36 பில்லியன் டொலர்களை கொடையாக வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிருக்கான தொண்டுகளை முன்னெடுக்கப்படுவதாக போவதாக மெலின்டா தெரிவித்துள்ளார்.