சுவிட்சர்லாந்தில் டிக்டாக் பிரபலமொருவர் ட்றோன் ஊடாக பணத்தை கீழே வீசியுள்ளார்.
சூரிச்சில் அமைந்துள்ள பூங்காவொன்றில் இவ்வாறு பணம் வீசப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 12 வயதான சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளான்.
கூரிய பொருளொன்றினால் சிறுவனுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 24000 சுவிஸ் பிராங்குகள் ட்றோன் ஊடாகப் போடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அனுமதி பெற்றுக்கொள்ளாது இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ட்றோனிலிருந்து போடப்பட்ட பணத்தை திரட்டிக் கொள்வதற்கு மக்கள் அலை மோதியதாகவும் இந்த சன நெரிசலில் சிறுவன் காயமடைந்தான் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.