சுவிட்சர்லாந்தில் தற்பொழுது ஒரு வகை காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பருவகால காலநிலை மாற்றத்துடன் சுவிட்சர்லாந்தில் நாசியழற்சி ஒவ்வாமை காய்ச்சலினால் (hay fever) பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
நூறாண்டுக்கு முன்னதாக இந்த வகை காய்ச்சல் பற்றி மக்கள் அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தற்பொழுது நாட்டில் 20 வீதமானவர்கள் இந்த பருவமாற்ற காய்ச்சல் தொற்றுக்கு இலக்காகின்றனர்.
சில தாவரங்களிலிருந்து மனிதனுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய மகரந்த துகள் வெளியிடப்படுவதாகவும் இதனால் மக்கள் நோய்வாய்ப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.