மது அருந்துவதனால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்க்கக் கூடிய புதிய ஜெல் ஒன்றை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
மது அருந்துவதனால் உடலுக்கு ஏற்படக்கூடிய தீங்குகளை வரையறுக்கக் கூடிய வகையிலான ஓர் ஜெல் வகையொன்று இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து மத்திய தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆய்வாளர்களினால் இவ்வாறு புதிய வகை ஜெல் உருவாக்கப்பட்டுள்ளது.
அருந்தும் மதுவானது உடலின் இரத்தத்தில் கலப்பதற்கு முன்னதாக அல்ஹோலை துகள்களாக உடைக்கும் செயன்முறையை இந்த ஜெல் செய்கின்றது.
Nature Nanotechnology என்ற சஞ்சிகையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஜெல் வகை எலிகளுக்கு கொடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் எலிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அல்கஹோலினால் உடலுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஜெல் உடலில் தொழிற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.