மத்திய வங்கி பிணை முறி மோசடியை விடவும் வீசா மோசடி பெரியது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
பிணை முறி மோசடியின் மூலம் நாட்டுக்கு பத்து பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் வீசா மோசடியினால் நாட்டுக்கு 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வீ.எப்.எஸ் வீசா மோசடி மிகவும் பாரியளவிலானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளை எதிர்நோக்கி வரும் நிலையில் அரசாங்கம் இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
ஒன் அரைவல் வீசா மூலம் பாரியளவு வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.