உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் மருந்து வகையானது மாரடைப்பை வரையறுப்பதற்கு உதவும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் இது தொடர்பிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உடல் பருமணை வரையறுப்பதற்காக பயன்படுத்தப்படும் ஊசி மருந்து இருதய நோய்களையும் மாரடைப்பையும் வரையறுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடல் எடையை குறைப்பதற்காக சந்தையில் விற்பனை செய்யப்படும் Wegovy and Ozempic ஆகிய மருந்து வகைகளினால் மாரடைப்பு ஏற்படும் சந்தர்ப்பத்தை 20 வீதத்தினால் குறைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல் எடை குறித்த ஐரோப்பிய காங்கிரஸ் இது குறித்த அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது.
உடல் எடையை குறைப்பதற்காக பயன்படும் மருந்துகள் இருதய ஆரோக்கியத்திற்கு உதவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் 7.6 மில்லியன் மக்கள் இருதய நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.