செயற்கை நுண்ணறிவு தொடர்பில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்டுள்ள அபரிமித வளர்ச்சி குறித்து இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
அமெரிக்க மற்று சீன அரசாங்கத் தரப்புக்களுக்கு இடையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் செயற்கை நுண்ணறிவு குறித்து ஒத்துழைப்பினை ஏற்படுத்துவது குறித்து இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி தொடர்பிலான தகவல் பரிமாற்றமாக இந்த கூட்டம் அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
சீன அரசாங்கம் சிவிலியன் மற்றும் இராணுவ விவகாரங்களில் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.