உக்ரைன் சமாதான மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரையில் 50 நாடுகள் உறுதியளித்துள்ளன.
இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு 160 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
மத்திய சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 15 மற்றும் 16ம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
பர்கன்ஸ்டோக் என்னும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
பல்வேறு நாடுகளையும் இந்த மாநாட்டில் பங்கேற்கச் செய்யும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.