பிரபல மோட்டார் பந்தய வீரர் மைக்கல் சூமாக்கரின் கைக்கடிகாரங்கள் நான்கு மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஜெனீவாவில் கிறிஸ்டிஸ் ஏலவிற்பனை இல்லத்தினால் இந்த கைக்கடிகாரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
போர்மியூலா வன் கார்பந்தாட்டப் போட்டியில் பல சந்தர்ப்பங்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சூமாக்கர், பல விலைமதிப்பான கைக்கடிகாரங்களை சேகரித்து வைத்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தின் படுகாயமடைந்த சூமாக்கர் அதன் பின்னர் பொதுவெளியில் தோன்றவில்லை.
எட்டு கைக்கடிகாரங்கள் இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்பய்பட்டுள்ளன.
சூமாக்கரின் குடும்பத்தினர் இவ்வாறு கைக்கடிகாரங்களை ஏலத்தில் விற்பனை செய்துள்ளனர்.
இந்தை கைக்கடிகாரங்கள் சுமார் இரண்டு மில்லியன் பிராங்குகளுக்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் இந்த கைக்கடிகாரங்கள் சுமார் நான்கு மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.