சுவிட்சர்லாந்தில் இலத்திரனியல் வாகன கொள்வனவில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய புள்ளிவிபரத் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இலத்திரனியல் வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை குறவைடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இலத்திரனியல் கார்களை கொள்வனவு செய்வதில் பெண்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதில்லை என கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
சார்ஜ் செய்து பயன்படுத்தப்படும் வாகனங்களினால் பயனில்லை என 27 வீதமானர்கள் தெரிவித்துள்ளனர்.