ஸ்லோவாக்கிய பிரதமர் ரொபர்ட் பிகோ (Robert Fico) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிகோ உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிகோ அண்மைக் காலமாக ரஸ்யாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிகோ மீது சில துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
என்ன காரணத்திற்காக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம், ரஸ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.