சுவிட்சர்லாந்து அரசாங்கம் விமான பயணிகளின் தரவுகளை திரட்டத் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 2026ம் ஆண்டு முதல் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாதம் மற்றும் பாரிய குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் இவ்வாறு பயணிகளின் தரவுகளை சேகரிக்கத் தீர்மானித்துள்ளது.
விமானப் பயணிகளின் தரவுகளை திரட்டும் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து நீதி அமைச்சர் பீட் ஜேன்ஸ் இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 11 தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்கா விமானப் பயணிகளின் விரபங்களை திரட்டத் தொடங்கியது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகள் உள்ளிட்ட உலகின் 70 நாடுகள் விமானப் பயணிகளின் விபரங்களை பரிமாறிக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பயணிகள் பெயர் பதிவு “Passenger Name Record” (PNR) என்ற முறையின் கீழ் இவ்வாறு தரவுகள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
விமானப் பயணிகளின் தரவுகளை திரட்டுவதற்கான சட்ட அங்கீகாரம் இன்னமும் சுவிட்சர்லாந்திடம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு திரட்டப்படும் தகவல்கள் பாதுகாப்பாக பேணப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.