சுவிட்சர்லாந்து பல்பொருள் அங்காடியொன்றில் நூதன திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
34 வயதான ஸ்பெய்ன் பிரஜை ஒருவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் முன்னணி பல்பொருள் அங்காடிகளில் ஒன்றான மைக்ரோஸ் (Migros) கிளையொன்றில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது.
இந்த அங்காடியில் வாடிக்கையாளர்கள் தங்கள் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு தாமகவே விலைப் பட்டியலை போடக்கூடிய வசதியுடையது.
ஒவ்வொரு பொருளுக்குமான பார் கோர்ட்களை இயந்திரத்தில் காண்பித்து விலைப்பட்டியலை பெற்று பணம் செலுத்த முடியும்.
குறித்த நபர் கரட்டிற்கான இரண்டு சுவிஸ் பிராங்குகள் என்ற விலையை பயன்படுத்தி பெறுமதியான வேறும் பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளார்.
தனது உள்ளங்கையில் கரட்டின் விலை குறிப்பிடப்பட்ட பார் கோர்ட் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு அதனை செல்ப் செக் அவுட் (self-checkout) தானியங்கி இயந்திரத்தில் காண்பித்து விலை பட்டியல் இட்டுள்ளார்.
இதன் மூலம் சுமார் 388 சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான பொருட்களின் விலை வெறும் 26.35 பிராங்குகள் என காண்பிடக்கப்பட்டுள்ளது.
இயந்திரத்தில் மோசடியான முறையில் விலைப் பட்டியலை பெற்றுக் கொண்டு மேற்கொண்ட மோசடிக்காக குறித்த நபருக்கு நீதிமன்றம் 400 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதித்துள்ளது.
மேலும் வழக்கு விசாரணைக்கான செலவுகளாக 500 சுவிஸ் பிராங்குகளையும் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.
பல்பொருள் அங்காடிகளில் இவ்வாறான பல்வேறு மோசடிகள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகின்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மோசடிகளை தவிர்ப்பதற்காக பணியாளர்களுக்கு அதிகளவு பயிற்சிகள் வழங்கப்படுவதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.