நாட்டில் ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்கப்பட முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சந்தித்த போதே அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.
எனவே ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.