ஸ்லோவாக்கிய பிரதமர் ரொபர்ட் பிக்கோவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம் வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து ஜனாதிபதி வியோலா ஹம்ஹார்ட் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அனைத்து வகையிலான வன்முறைச் சம்பவங்களையும் எதிர்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் இது தொடர்பிலான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
சவால் மிக்க தருணத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தை நிறைவு செய்து வெளியேறிய போது ஸ்லோவாக்கிய பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.