சுவிட்சர்லாந்தின் வாலைஸ் கான்டனில் பால்நிலை மாற்று சிகிச்சைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கான்டனின் சட்ட மன்றில் இந்த சட்ட மூலத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பால்நிலை அடையாளத்தை மாற்றக் கூடிய சிகிச்சை முறைமைகளுக்கு தடை விதிக்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது தடைக்கு ஆதரவாக 106 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த பால் நிலை மாற்று சிகிச்சைகளுக்கு இடமில்லை என்பது சட்ட மன்றத்தின் ஊடாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நியூசெட்டால் உள்ளிட்ட சில கான்டன்களில் ஏற்கனவே இந்த சிகிச்சைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.