சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்றை கொள்வனவு செய்வதில் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குடியிருப்பு அல்லது வீடு ஒன்றை சொந்தமாக கொள்வனவு செய்வது நாளுக்கு நாள் சவால் மிக்கதாக மாறியுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஜெர்மன் அல்லது பிரான்ஸ் பிரஜையொருவர் முதல் தடவையாக வீடு கொள்வனவு செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தை விடவும் 14 முதல் 17ஆண்டுகள் கழித்தே சுவிஸ் பிரஜை ஒருவர் வீடு கொள்வனவு செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1990களில் ஒருவரின் சம்பளத்தில் வீடு கொள்வனவு செய்ய முடிந்த போதிலும் தற்பொழுது இரண்டு பேரின் சம்பளத்தைக் கொண்டும் வீடு கொள்வனவு செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2018ம் ஆண்டில் வீடு ஒன்றை உரிமையாக்கிக் கொள்ளும் சராசரி வயது 58 ஆக பதிவாகியுள்ளது.