சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் மாற்றங்கள் செய்யப்பட முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை திருத்தப் போவதாக அறிவித்திருந்தது.
எனினும் அவ்வாறு இந்த உடன்படிக்கையில் திருத்தங்கள் செய்ய முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கமும், கடன் கொடுனர்களும் இணைந்து சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2033ம் ஆண்டு வரையில் இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகள் உள்ளடக்க்பபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த நிபந்தனைகள் ஒவ்வொன்றாக பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும், இது குறித்து சர்வதேச நாணய நிதியம் திருப்தி கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.