ரஸ்யா மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் நோக்கில் சுவிட்சர்லாந்தில் சமாதான மாநாடு நடத்தப்படுவதாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜுன் மாதம் 15 மற்றும் 16ம் திகதிகளில் புர்ஜன்ஸ்டொக் ஹோட்டலில் இந்த சமாதான மாநாடு நடைபெறவுள்ளது.
சீனாவிற்கான இரண்டு நாள் விஜயத்தை முடித்துக் கொண்டதன் பின்னர் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த மாநாட்டில் பங்குபற்றுமாறு அதிகாரபூர்வமாக ரஸ்யாவிற்கு இதுவரையில் அழைப்புகூட விடுக்கபபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்யா மற்றும் உக்ரைன் சார்பிலான தரப்புக்கள் பங்கேற்காது ஏனைய தரப்புக்கள் ஒன்று கூடுவதனால் பயனில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சமாதான மாநாட்டுக்கான ஏற்பாட்டு பணிகள் சுவிட்சர்லாந்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.