ஈரானிய ஜனாதிபதி பயணம் செய்த உலங்கு வானூர்தி காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ராய்சீ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஹொசெய்ன் அமீரப்துலானியன் ஆகியோர் பயணம் செய்த உலங்கு வானூர்த்தி இவ்வாறு காணாமல் போயுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு உலங்கு வானூர்தி காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் கிழக்கு அசர்பைசான் மாகாணத்தில் இவ்வாறு உலங்கு வானூர்தி காணாமல் போயுள்ளது.
உலங்கு வானூர்தி வேகமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுன்குன் என்ற செப்பு சுரங்கமொன்றிற்கு அருகாமையில் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலங்கு வானூர்தியை கண்டு பிடிப்பதற்காக சுமார் 40 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் ஜனாதிபதி உயிரிழந்திருந்தால் அந்நாட்டு அரசியல் சாசனத்தின் பிரகாரம், முதல் துணை ஜனாதிபதி மொஹமட் மொக்பீர் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.