இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வர்த்தகர் எலொன் மஸ்க்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தோனேசியாவில் நடைபெறும் 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வுடன் இணைந்து, இலங்கையில் Starlink சேவை வசதியை அமுல்படுத்துவது குறித்து ஆலோசிக்கும் நோக்கில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இன்றைய தினம் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது மேற்படி செயன்முறையில் இணைவதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.
இதேவேளை, இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுத் பின்சார் பண்ட்ஜாய்டன் Luhut Binsar Pandjaitan சந்திப்பு நடத்தியுள்ளார்.
இந்த இருதரப்பு சந்திப்பு இன்று (19) குரா குரா பாலி தீவில் உள்ள (Kura Kura Bali island) அமைந்துள் (United In Diversity Bali Campus) “United In Diversity” வளாகத்தில் நடைபெற்றது.