சுவிட்சர்லாந்தில் கோதார்ட் வடக்குப் பகுதியில் சுமார் 20 கிலோ மீற்றர் வரையில் வாகன நெரிசல் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிட்வால்டன் மற்றும் ஊரி ஆகிய கான்டன்களுக்கு இடையிலான பாதையில் இவ்வாறு நீண்ட வாகன நெரிசல் காணப்பட்டது.
சனிக்கிழமை காலை வேளை முதல் இவ்வாறு வாகன போக்குவரத்து நெரிசல் நிலை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பயணிகள் சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரையில் காத்திருக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோதார்ட் சுரங்கப் பாதை வழியாக செல்லும் வாகனங்கள் வேறும மாற்று வழிகளில் பயணம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.