சுவிட்சர்லாந்தில் வானில் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ரிக்கினோ கான்டனைச் சேர்ந்த 36 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விங்சூட் ஜம்ப் (wingsuit jump) என்னும் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இறக்கைகள் போன்ற ஆடை அணிந்து உலங்கு வானூர்தியிலிருந்து கீழே குதித்த போது குறித்த நபர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்த மரணம் குறித்த தகவல்களை சுவிட்சர்லாந்து சட்ட மா அதிபர் திணைக்களம் உறுதி செய்துள்ளது.
என்ன காரணத்தினால் எவ்வாறு விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.