சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு மாணவர்களின் மீதான வரியை மூன்று மடங்காக அதிகரிப்பது குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
லூசார்ன் தொழில்நுட்ப நிறுவகத்தில் கற்கும் வெளிநாட்டு மாணவர்களிடம் இவ்வாறு வரி அறவீடு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாடாளுமன்றக் குழுவினால் இது குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
சுவிஸ் மாணவர்களைவிடவும் வெளிநாட்டு மாணவர்களிடமிருந்து அறவீடு செய்யப்படும் வரித் தொகை மூன்று மடங்காக உயர்த்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனை தொடர்பில் நாடாளுமன்றில் ஆராயப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.