ஈரானின் பதில் ஜனாதிபதியாக துணை ஜனாதிபதி மொஹமட் மொக்பார் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலங்கு வானூர்தி விபத்தில் ஜனாதிபதி இப்ராஹிம் ராய்சீ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீராப்துல்லஹின் உள்ளிட்ட சிலர் உயிரிழந்தனர்.
அரசியல் அமைப்பின் 131ம் சரத்தின் பிரகாரம் மொக்பார் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்ல அல் கொமெய்னியின் தீர்மானத்திற்கு அமைய இவ்வாறு மாக்பார் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 50 நாட்களுக்கு நாட்டின் காபந்து ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரானின் பதில் வெளிவிவகார அமைச்சராக அலி பக்ரி கானி நியமிக்கப்பட்டுள்ளார்.
கானி கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நாட்டின் பதில் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.