ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சீயின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் வெளியிட்டுள்ளார்.
இந்த மரணச் செய்தி பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அதிகாரபூர்வ எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில் அவர் இந்த இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
ஈரானிய ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஏனைய பிரதிநிதிகளின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், ஈரானிய மக்கள் ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இப்ராஹிமின் குடும்பம் உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.