ஈரானிய ஜனாதிபதி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ராய்சீ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் பயணம் செய்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானது.
அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் பங்கேற்று திரும்பிய போது சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த உலங்கு வானூர்தியில் பயணம் செய்த எவரும் உயிருடன் இருக்கக் கூடிய சாத்தியமில்லை என சர்வதேச செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது.
மிக நீண்ட முயற்சியின் பின்னர் உலங்கு வானூர்தி கண்டு பிடிக்கப்பட்டது.
உலங்கு வானூர்தி இடிபாடுகளை பார்க்கும் போது அதில் பயணம் செய்த எவரும் உயிருடன் இருக்கக்கூடிய சாத்தியமில்லை என செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது.