உலங்கு வானூர்தி விபத்தில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ராய்சீ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீராப்துல்லஹின் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அசர்பைஜான் எல்லைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் கிழக்கு அசர்பைஜான் மாகாண ஆளுனர் மெலெக் ரஹமட்டி உள்ளிட்ட உலங்கு வானூர்தியில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
பெல் 212 ரக உலங்கு வானூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பத்து மணித்தியாலங்களுக்கு மேல் தேடுதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் உலங்கு வானூர்தியின் இடுபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டன.
இந்த விபத்து தொடர்பில் ஈரானிய அரசாங்கம் தொலைக்காட்சி ஜனாதிபதியின் உயிரிழப்பு பற்றிய தகவல்களை உறுதிப்படுத்தும் வகையிலான செய்திகளை வெளியிட்டுள்ளது.