உலகின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எமிரோட்ஸ் நிறுவனம் பாரியளவு லாபத்தை பதிவு செய்துள்ளது.
வரலாறு காணாத அளவில் எமிரேட்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் லாபமீட்டியுள்ளது.
நிறுவனத்தின் இந்த நிதியாண்டுக்கான லாபம் 5.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நிதியாண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டின் லாபம் 71 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
நிறுவனத்தின் வருமானம் 15 வீதத்தினால் அதிகரித்து மொத்த வருமானம் 37.4 பில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.
இந்த நிதியாண்டுக்கான காசு கையிருப்பு சாதனை தொகையை பதிவு செய்துள்ளதாகவும், 12.8 பில்லியன் டொலர் கையிருப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த 2023-2024 நிதியாண்டு முழுவதிலும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் சேவைக்கு நல்ல கிராக்கி நிலவியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிதியாண்டில் விமானங்களை கொள்வனவு செய்வதற்காக எமிரேட்ஸ் நிறுவனம் 2.4 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது.