சுவிட்சர்லாந்தின் இரண்டு ஏ.ரீ.எம் இயந்திரங்களில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஜூரா கான்டனில் இவ்வாறு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை வேளையில் இவ்வாறு ஏ.ரீ.எம்.இயந்திரங்களில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு ஏ.ரீ.எம் இயந்திரங்களும் வெடிக்கச் செய்யப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
எவ்வளவு பணம் கொள்ளையிடப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளிவரவில்லை.
இனந்தெரியாத நபர்கள் ஏ.ரீ.எம். இயந்திரங்களை வெடிக்கச் செய்து பணத்தை கொள்ளையிட்டு வாகனங்களில் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு சம்பவங்களின் போதும் அருகாமையில் இருந்த கட்டிடங்களும் சேதம் விளைவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கொள்ளைச் சம்பவத்தினால் கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.